கிருஷ்ணகிரி கோர விபத்து... உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
- கிருஷ்ணகிரி மாவட்டம், காவிரிப்பட்டினம் அருகே இன்று காலை தருமபுரியில் இருந்து ஆந்திராவிற்கு சென்றுகொண்டிருந்த டிராக்டர் மீது எதிர்பாராத விதமாக தனியார் பேருந்து பின்புறம் மோதியதில் டிராக்டரில் பயணம் செய்துகொண்டிருந்த தருமபுரி மாவட்டம், சவுளூர், நூலஅல்லி கிராமத்தைச் சேர்ந்த திரு. முனுசாமி.
- த/பெ.ஊமையன் (வயது 55), திருமதி மல்லி (வயது50), திருமதி வசந்தி, க/பெ.சின்னசாமி (வயது 45), திரு.முத்து, த/பெ.சின்னசாமி (வயது 22) மற்றும் வர்ஷினி, த/பெ.சதீஷ் (3 மாத குழந்தை) ஆகியோர் உயிரிழந்தனர்.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.