கோவை மாவட்டம் காரமடை வனப்பகுதியில், நாக்கில் குத்துக்காயத்துடன் பெண் யானை ஒன்று சுற்றி திரிந்தது. இதனையடுத்து அதனை பிடித்த வனத்துறையினர் கால்நடை மருத்துவர்கள் மூலமாக மயக்க ஊசி செலுத்தி, அதற்கு முதற்கட்ட சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வரகளியாறு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பெண் யானைக்கு, 3 கால்நடை மருத்துவர்களை கொண்ட குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் நாக்கில் ஏற்பட்ட காயம் காரணமாக உணவருந்த முடியாமல் சிரமப்பட்ட யானை, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளது. இதனையடுத்து தொடர்ந்து நாளை காலை யானைக்கு பிரேத பரிசோதனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.