காரில் வெடிகுண்டு வைத்து கொலை? அலெக்சாண்டருக்கு வைக்கப்பட்ட குறியில் மகள் சிக்கினாரா?

Update: 2022-08-21 17:18 GMT

காரில் வெடிகுண்டு வைத்து கொலை? அலெக்சாண்டருக்கு வைக்கப்பட்ட குறியில் மகள் சிக்கினாரா?


ரஷ்ய அதிபர் புதினின் "மூளையாக" செயல்பட்ட ரஷ்ய அரசியல் தத்துவவாதியும், தேசியவாத சித்தாந்தவாதியும், ஆய்வாளருமான அலெக்சாண்டர் டுகினின் மகள் மாஸ்கோ அருகில் கார் வெடிகுண்டு விபத்தில் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலெக்சாண்டர் டுகினும் அவரது மகளான டர்யா டுகினாவும் தனித்தனி கார்களில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது... பத்திரிகையாளரான டர்யா உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு ஆதரவு அளித்திருந்தார். ரஷ்ய படையெடுப்பிற்கு ஆதரவு தெரிவித்ததற்காக இவர் மீது பிரிட்டன் பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது. இவரது தந்தை அலெக்சாண்டர் டுகின் மீது வைக்கப்பட்ட குறியில் தவறுதலாக டர்யா பலியானாரா என்பதும் கேள்வியாக உள்ளது. அதே சமயம் இந்த சம்பவம் குறித்து ரஷ்யா இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்