கேரளா ரயில் எரிப்பு சம்பவம்...சாட்சியளிக்க வந்த நபர் தற்கொலை

Update: 2023-05-21 16:48 GMT

கேரளா மாநிலம் இலத்தூர் ரயில் எரிப்பு வழக்கில், சாட்சியமளிக்க வந்த இளைஞனின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், பிரேத பரிசோதனைக்குப் பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இலத்தூர் ரயில் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷாருக் சைஃபியின் நண்பர் ஷாஹீன் பாக் பகுதியை சேர்ந்த முகமது மோனிஸ். என்ஐஏவிடம் வாக்குமூலம் அளிக்க இவரும், தந்தை முகமது ஷெபிக்கும் கடந்த 16-ம் தேதி கொச்சியிலுள்ள கடவந்தராவில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். முகமது மோனிஸின் வாக்குமூலத்தை NIA பதிவு செய்த நிலையில், சாட்சி சொல்ல இருந்த அவரது தந்தை, விடுதியில் உள்ள குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து முகமது மோனிஸ், தகவல் அளித்த நிலையில், போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மகன் முகமது மோனிசை போலீசார் கடவந்திரா காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில், உயிரிழந்த முகமது ஷெபிக் உடலை ஆலப்புழா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்