ரத்த வெள்ளத்தில் மிதந்த மனைவி, மகன் தூக்கில் தொங்கிகிடந்த கணவர்..! ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி... பகீர் பின்னணி

Update: 2023-04-05 04:13 GMT
  • கேரள மாநிலம் கொச்சியில் மனைவி, மகனை அடித்துக் கொலை செய்து விட்டு, கணவரும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • கொச்சி பனங்காட்டு பகுதியை சேர்ந்த மணியன் என்பவருக்கு, மனைவி சரோஜினி மற்றும் மனநலம் பாதித்த மகன் மனோஜ் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.
  • இந்த நிலையில், உறவினர் ஒருவர் வீட்டுக்கு வந்தபோது, மணியன் தூக்கில் தொங்கிய நிலையிலும், சரோஜினி மற்றும் மனோஜ் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
  • தகவலின் பேரில் வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, வீட்டில் அடிக்கடி தகராறு நடைபெறும் என்றும், மீண்டும் நடந்த சண்டையில், மணியன் மனைவி மற்றும் மகனை கொன்றுவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
  • எனினும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்