கேரள மாநிலம் கொச்சி மற்றும் கரிப்பூர் விமான நிலையங்களில் 3 கோடி 38 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆறரை கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து கொச்சி வந்த விமானத்தில் பயணித்த பாலக்காட்டைச் சேர்ந்த முஹம்மது என்பவர், 3 ஆணுறைகளில் 833 கிராம் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து கடத்தி வந்ததை, சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
அதேபோல், கரிப்பூர் விமான நிலையத்தில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை, சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், மலப்புரத்தை சேர்ந்த அப்துல் ஆஷிக் என்பவர், கம்ப்யூட்டர் பிரிண்டருக்குள் 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 995 கிராம் தங்கதை மறைத்து கடத்தி வந்ததும் கண்டறியப்பட்டது.
இது தவிர, ஏர் இந்தியா விமானத்தின் கழிவறையில் இருந்த குப்பைத் தொட்டியில் இருந்து, ஆயிரத்து 145 கிராம் எடையுள்ள பேஸ்ட் வடிவலான தங்கத்தை, சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். ஒரே நாளில், கேரள விமான நிலையங்களில் இருந்து ஆறரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.