புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு.

கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கட்டாயம் முகக்கவசம் அனிய வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-12-27 06:57 GMT

சீனாவில் மீண்டும் பரவத்தொடங்கியுள்ள புதிய வகை கொரோனா வைரஸினால், உலக நாடுகள் முழுவதும் சில கட்டுபாடுகளினை நாட்டு மக்களிடையே விதிக்க ஆரம்பித்துள்ளன. இந்தியாவிலும், இது தொடர்பான விழிப்புணர்வினை அரசாங்கம் ஏற்படுத்தி வரும் நிலையில், கர்நாடகா அரசு கொரோனா கட்டுபாடுகள் தொடர்பாக பல்வேறு புதிய நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளில் முகக்கவசம் கட்டாயம் எனவும், புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது உணவு விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்