பேருந்து நடத்துனரை தாக்கிய நபர்.. - ரவுண்டு கட்டிய சக பயணிகள் | கன்னியாகுமரியில் பரபரப்பு
கன்னியாகுமரியில்Kanyakumari, அரசுப் பேருந்து நடத்துனரை தாக்கிய நபர்களை, சக பயணிகள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தக்கலை அருகே திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் ஆல்பின்சோபி என்பவரை, பேருந்தில் பயணம் செய்த பணிமலராஜ், அவரது நண்பர் மரிய ஸ்டீபன் ஆகியோர், பேருந்தை நிறுத்தக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், நடத்துனரை தாக்கியதால், அதிர்ச்சி அடைந்த சக பயணிகள், பணிமலராஜை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். நடத்துனர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது