- கச்சத்தீவு பகுதியில் புனித அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை என இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
- கச்சத்தீவு தீவில் வேறு எந்த சிலையோ, அல்லது மத நினைவுச்சின்னத்தை அமைக்கும் எண்ணம் கடற்படைக்கு இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
- கச்சத்தீவில் உள்ள கடற்படைப் பிரிவில் பணிபுரியும் பெரும்பாலானோர் பௌத்தர்கள் இருப்பதால், ஒரு சிறிய புத்தர் சிலைக்கு மரியாதை செலுத்தி வருவதாகவும், வேறு கட்டமைப்புகளுக்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் கடற்படை அறிக்கையில் தெரிவித்துள்ளது.