உங்க வாட்ஸ் அப்பிலே ரயில் டிக்கெட் எடுக்கும் வசதியை சென்னை மெட்ரோ அறிமுகம் செய்திருக்கிறது. இதை எப்படி நீங்க பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்
மெட்ரோ ரெயில்... வெயில், தூசிலிருந்து நம்மை காத்து செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாகவே அழைத்துச் செல்கிறது...
பயண நேரத்தை மட்டுமல்ல... சேவைக்கு முன்பு டிக்கெட் எடுப்பதில் ஏற்படும் கால விரயத்தையும் குறைக்க நடவடிக்கை எடுக்கிறது சென்னை மெட்ரோ... டோக்கன் வரிசையை குறைக்க, ஸ்மார்ட் கார்டு திட்டத்தை கொண்டுவந்தது. கொரோனா காலத்தில் கியூ-ஆர் டிக்கெட் வசதியையும் கொண்டுவந்தது.
கடந்த ஏப்ரல் வரையில் 39.8 லட்சம் ஸ்மார்ட் கார்டை மெட்ரோ வழங்கியிருக்கிறது. அந்த வரிசையில் இப்போது வாட்ஸ் அப் டிக்கெட் புக்கிங் சிஸ்டம்...
ஏற்கனவே இந்தியாவில் பெங்களூரு, ஐதராபாத், மும்பை, புனே மெட்ரோக்களில் இந்த சேவை வழங்கப்படுகிறது. தொடர்ச்சியாக சென்னையிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது...
இதில் எப்படி புக் செய்வது என்றால்... மெட்ரோ வழங்கியிருக்கும் 83000 86000 எண்ணிற்கு ஹாய் என உங்கள் வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்டால்..
விசுவல் சென்னை மெட்ரோ வழங்கியிருக்கும் விளக்கப்படத்தை, ஸ்கிரிப்ட்டுக்கு ஏற்ற வகையில் வைத்துக்கொள்ளவும்
மெட்ரோ சாட் பாட் வாயிலாக உங்களை தொடர்பு கொள்ளும்.. உங்களை வரவேற்கும் சென்னை மெட்ரோ எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும். எத்தனை பேர் செல்ல போகிறீர்கள் என கேள்விகளை கேட்கும். நீங்கள் எங்கு செல்ல வேண்டும், எத்தனை டிக்கெட் வேண்டும் என்பதை பதிவு செய்ய வேண்டும்...
இறுதியாக டிக்கெட் கட்டணம் செலுத்துவதற்கு இருக்கும் ஆப்ஷன்களை மெட்ரோ குறிப்பிடும்.
யுபிஐ, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வாயிலாக டிக்கெட் எடுக்கலாம்.. கட்டணம் செலுத்தியதும் கியூ-ஆர் கோர்டு டிக்கெட் உங்கள் வாட்ஸ் அப் எண்ணிற்கு உங்களுக்கு வந்துவிடும்..
வாட்ஸ் அப்-பில் டிக்கெட் எடுக்கும் போது கட்டணத்தில் 20 % தள்ளுபடி என்ற கவர்ச்சி அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது சென்னை மெட்ரோ...
அதனை பயன்படுத்தி இனிமையான உங்கள் பயணத்தை தொடங்கலாம்..