ஜெயலலிதா மரண அறிக்கை - முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 6 மணிக்கு கூடும் அமைச்சரவைக் கூட்டத்தில் 17 ஆம் தேதி கூடவுள்ள தமிழக
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட
உள்ள சட்ட மசோதாக்கள், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கை,
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவதற்கான சட்ட மசோதா, புதிய தொழில் முதலீடுகள், வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவை
குறித்து, அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்புள்ளதோடு, பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல்
வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்தும், துறைவாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிலை குறித்தும் தமிழக முதலமைச்சர் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.