போராட்டத்தை படமெடுத்ததால் வந்த வினை... ஜப்பான் செய்தியாளருக்கு மியான்மரில் 10ஆண்டுகள் சிறை...

Update: 2022-10-07 12:15 GMT

போராட்டத்தை படமெடுத்ததால் வந்த வினை... ஜப்பான் செய்தியாளருக்கு மியான்மரில் 10ஆண்டுகள் சிறை...


ஜப்பானைச் சேர்ந்த செய்தியாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது... ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தைப் படமெடுப்பதற்காக சென்ற ஜப்பானைச் சேர்ந்த டோரு குபோடா என்ற செய்தியாளர், மியான்மரி மின்னணு தகவல் பரிமாற்ற சட்டத்தை மீறுதல், மற்றும் போராட்டத்தைத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மொத்தம் 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் அங்கு கைது செய்யப்பட்ட 5வது வெளிநாட்டு ஊடகவியலாளர் குபோடா என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்