குழந்தைக்கு பர்த்டே.., வீட்டுக்குள் வந்த டிரைவர்.. அடுத்த நொடி..மகள் கழுத்தில் கத்தி - ஆடிட்டரை அலர விட்ட 8 வருட விசுவாசி - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2023-07-22 05:16 GMT


சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த தாணுமலையபெருமாள் தனியார் நிறுவன ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். அவரது கார் ஓட்டுரனராக கடந்த எட்டு வருடங்களாக வேலை செய்யும் உசேன் என்பவர் இன்று காலை வீட்டிற்கு வந்து தனது குழந்தைக்கு பிறந்தநாள் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய பெருமாள் வீட்டிற்குள்ளே அனுமதித்தவுடன்,ஓட்டுனர் மற்றும் உடன் வந்த இரண்டு பேர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெருமாளின் மகள் கழுத்தில் வைத்து தனக்கு பணம் வேண்டும் என மிரட்டியுள்ளனர்.

இதனை தடுக்க வந்த அவரது மனைவியையும் உள்பட மூன்று பேரையும் கட்டி போட்டுவிட்டு பீரோவில் இருந்த 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தையும் 15 சவர நகையையும் எடுத்தது மட்டுமில்லாமல், வங்கி கணக்கில் இருந்த 5 லட்சம் ரூபாயையையும் மிரட்டி நெட் பேங்கிங் மூலம் விஜய் என்பவருக்கு மாற்றம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததின்பேரில், அங்கு வந்த போலீசார் சிசிடிவி.வியில் பதிவான காட்சிகளை வைத்து தப்பி ஓடிய ஓட்டுனர் உசேன் மற்றும் அவரது நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்