வருமான வரி சோதனை இன்று வரை தொடர்ந்து நடைபெறும் என்று திமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
கோவை சூலூர் பகுதியில் உள்ள செந்தில் கார்த்திகேயன் வீட்டில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வரும் நிலையில், அவரை வெளியே அனுப்ப கோரி ஆதரவாளர்கள் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் அனுமதியோடு வெளியே வந்து ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய செந்தில் கார்த்திகேயன், வருமான வரி சோதனை நேற்று இரவு மற்றும் இன்றும் தொடரும் என தெரிவித்தார். பின்னர், சோதனை நடைபெற்று வரும் தனது வீட்டிற்குள் சென்றார்.