ஆணிவேர் வரைக்கும் கை வைத்த IT ரெய்டு..வீட்டுமுன் குவிந்த திமுக நிர்வாகிகள்..துப்பாக்கியுடன் குவிக்கப்பட்ட போலீஸ்
மின்சாரம், மதுவிலக்கு துறை ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு
அதன் ஒரு பகுதியாக ஈரோடு திண்டல் அருகே உள்ள சக்தி நகரில் செந்தில் பாலாஜியின் உறவினரான சச்சிதானந்தம் என்பவரது வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று 12 மணி முதல் சோதனை செய்து வருகின்றனர்.சச்சிதானந்தம் என்பவர் ஈரோடு டாஸ்மாக் கடைகளிலிருந்து மது பாட்டில்களை டாஸ்மாக் கடைகளுக்கு விநியோகிக்கும் போக்குவரத்து ஒப்பக்காரராக இருந்து வருகிறார்.அவரது வீட்டில் இன்று காலை அதிரடியாக நுழைந்த வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கிருந்த மடிக்கணினி, கணினி மற்றும் சச்சிதானந்தம் பயன்படுத்தி வந்த டைரி உள்ளிட்ட வற்றை பறிமுதல் செய்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சச்சிதானந்தம் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பயன்படுத்தி வந்த வங்கி கணக்குகள் மற்றும் வங்கி லாக்கர்கள் போன்றவற்றின் ஆவணங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.மேலும் அவரது வீட்டில் உள்ள பத்திரங்கள், நிலம் வாங்கியதற்கான ஆவணங்கள் போன்றவற்றையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சோதனையின் காரணமாக ஈரோடு சக்தி நகர் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.KSM டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் இயங்கி வரும் இவரது வீட்டில் கேளராவைச் சேர்ந்த 6 வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையை அடுத்து அவரது வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.