பிரபல தனியார் கொரியர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. கொரோனா காலங்களில் அதிக அளவில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. முகவர்கள் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் கணக்கை முறையாக காட்டவில்லை என வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.