பெண் அதிகாரி உட்பட வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேரையும் முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் அவர்களை வெளியே இழுத்து வந்ததுடன், ஒப்பந்ததாரர் வீட்டை இழுத்துப் பூட்டியுள்ளனர்.
இதனிடையே, திமுக தொண்டர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், ஒரு பெண் அதிகாரி உட்பட 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்த நிலையில் திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் மற்றும் 5-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அதிவிரைவு படை போலீசார் கரூர் வந்துள்ளனர்.