முன்னாள் கார் ஓட்டுநருக்காக 4 மணி நேரம் விளக்கமளித்த நடிகர் மோகன்லால்

Update: 2023-02-18 08:53 GMT
  • மலையாள தயாரிப்பாளரிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள் குறித்து நடிகர் மோகன்லாலிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
  • கேரளாவில் கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி, மலையாள திரைப்பட தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
  • இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. நடிகர் மோகன்லாலும், தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூரும் இணைந்து பட தயாரிப்பு பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
  • இந்நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து, நடிகர் மோகன்லாலிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
  • கொச்சியில் உள்ள தனது வீட்டில், சுமார் 4 மணி நேரமாக நடிகர் மோகன்லால் விளக்கம் அளித்தார்.
  • தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், நடிகர் மோகன்லாலிடம் கார் ஓட்டுநராக இருந்து திரைப்பட தயாரிப்பாளரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்