செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் மீண்டும் IT ரெய்டு..சீலை அகற்றி 3 மணி நேர அதிரடி சோதனை..மீண்டும் பரபரப்பாகிய கரூர்

Update: 2023-06-24 04:18 GMT

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி வருமானவரித்துறை அதிகாரிகள் 8 நாட்கள் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் கரூர் மாநகரில் திடீர் சோதனையை தொடங்கிய அதிகாரிகள் அடுத்தடுத்து 7 இடங்களில் சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். கோதை நகர் பகுதியில் சக்தி மெஸ் உரிமையாளர்கள் கார்த்திக் மற்றும் அதிபர் ரமேஷ் ஆகியோரின் சீல் வைக்கப்பட்ட வீடுகளில் சீலை அகற்றி மூன்று மணி நேரம் சோதனை நடத்தினர்.

பின்னர், காந்தி நகர் அடுக்குமாடி குடியிருப்பில் அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் காமராஜபுரம் பகுதியில் ள பி.எஸ்.கே பில்டர்ஸ் பொறியாளர் பாஸ்கர் அலுவலகத்தில் சோதனை நடத்தினார். அதன்பிறகு, வையாபுரி நகர் பகுதியில் ஆடிட்டர் அலுவலகம் மற்றும் ஜவகர் பஜார் பகுதியில் பழனி முருகன் நகை கடையில், அடுத்தடுத்து சோதனை நடத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்