தமிழகத்தில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள தமிழ் ஓதுவார்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதனடிப்படையில், தமிழகம் முழுவதும் இருந்து 28 தமிழ் ஓதுவார்கள், பழங்கால இசைக் கருவிகளை வாசிக்கும் வித்வான்கள், கோவில் பூசாரிகள், சிப்பந்திகள், சங்கு முழுங்குபவர், பக்கவாத்தியம் வாசிப்பவர் ஆகியோர் சிறந்த தமிழ் கலைஞர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மதுரை ஆதீன மடத்தில், ஆதீனம் ஸ்ரீஸ்ரீ ஞான தேசிக பரமாசாரிய சுவாமிகள் வெள்ளி கேடயமும், பொற்கிழியும் வழங்கி கௌரவித்தார்.