ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா ஆதரவு... கொந்தளித்த அமெரிக்கா

Update: 2023-07-13 01:50 GMT

ஸ்வீடனில் தீவிர வலதுசாரி, அகதிகள் எதிர்ப்பு குழுக்களால் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்-ஆன் எரிக்கப்பட்டது. இந்தற்கு பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா உள்பட இஸ்லாமிய நாடுகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குர்-ஆன் எரிக்கப்பட்டதை கண்டித்த ஸ்வீடன் அரசு, தங்கள் நாட்டில் கருத்து சுதந்திரம், ஆர்ப்பாட்டம் என்பது அரசியலமைப்பு உரிமையாக உள்ளது எனவும் தெரிவித்தது. இந்த சூழலில் மத வெறுப்பு செயல்களை தடுக்க வேண்டும் என பாகிஸ்தான், ஐநா மனித உரிமைகள் அமைப்பில் தீர்மானம் கொண்டுவந்தது. குர்-ஆன் எரிப்பு செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானம் வலியுறுத்தியது. தீர்மானத்திற்கு இந்தியா, சீனா உள்பட 28 நாடுகள் ஆதரவு தெரிவித்ததும் தீர்மானம் நிறைவேறியது. தீர்மானத்தை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடுமையாக எதிர்த்தன. தீர்மானம் மனித உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரம் குறித்த தங்கள் பார்வைக்கு முரண்பட்டதாக இருக்கிறது என தெரிவித்தன. தீர்மானத்திற்கு எதிராக 12 வாக்குகள் விழுந்த நிலையில், 7 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்