இந்திய கிரிக்கெட் அணியின் நிரந்தர துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து விதமான போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படும் நிலையில், துணை கேப்டனாக கே.ராகுல் செயல்பட்டு வந்தார்.
எனினும் ராகுல் தொடர்ந்து தடுமாறி வருவதால், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் பாண்டியாக துணை கேப்டனாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.