இந்தியா - ஆஸி. அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி... ஆஸ்திரேலியா சூழலில் சுருண்ட இந்தியா - 109 ரன்களுக்கு All Out

Update: 2023-03-01 11:39 GMT

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு சுருண்டு இந்திய அணி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தூரில் இன்று தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணியில் கே.எல்.ராகுல் நீக்கப்பட்டு சுப்மன் கில் சேர்க்கப்பட்டார்.

ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு சுருண்டது.

ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ குன்னமென் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்