- வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகாவில் இயங்கி வரும் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
- சென்னையில் இயங்கிவரும் அசோக் ரெசிடென்சி ஹோட்டல் மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- அதேபோல ஆதித்யா ராம் மற்றும் அம்பாலால் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- தமிழகத்தில் மட்டும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.