பெங்களூரில் வருமான வரி சோதனை கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்..

Update: 2023-05-07 02:34 GMT

கர்நாடக மாநிலம் பெங்களூரூவின் பல்வேறு பகுதிகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கட்டு கட்டாக 20 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் கோலார் மாவட்டத்தில் தனியார் ரிசார்ட் ஒன்றில் நான்கரை கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது 20 கோடி ரூபாய் வருமானவரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளுக்கு தேர்தல் நேரத்தில் கொடுப்பதற்காக ஃபைனான்சியர்கள் பதுக்கி வைத்திருந்ததாக முதற்கட்ட தகவல் தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்