கேரளாவில் யூடியூப் சேனல் பெண் தொகுப்பாளரை அவமதித்த சம்பவம் தொடர்பாக நடிகர் ஸ்ரீநாத் பாசி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது. இது குறித்த விசாரணை கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்த போது
புகாரை தொடர விரும்பவில்லை என பெண் தொகுப்பாளர் ஆஜராகி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். தன்னை அவமானப்படுத்தியதையும், அநாகரீகமாக பயன்படுத்தியதாக தொடர்ந்த புகாரை,
தொடர விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதனையடுத்து கேரள உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்துள்ளது.