பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் ? முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓபன் டாக்

Update: 2023-07-14 05:42 GMT

இது தொடர்பாக ஆங்கில இதழுக்கு தனது கருத்தை பகிர்ந்துள்ள அவர், மத்தியில் பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் காங்கிரசுடன் கைகோர்க்க வேண்டுமெனவும்,

எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணையாததால்தான் பாஜக தொடர்ந்து வெற்றியை பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களின் ஒன்றியமே 'இந்தியா' எனக் கூறியிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக மாநிலங்களை அழிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

எல்லா மக்களுக்கான இந்தியாவை ஒரே மொழி, ஒரு மதம் என மாற்ற முயற்சிக்கும் பாஜக,

நட்டை எதேச்சதிகாரத்தின் கீழ் கொண்டுவர முயற்சிப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

அரசியலமைப்பை பாஜக அழிக்க விரும்புவதாகவும், பாஜக மீண்டும் வெற்றிப் பெற்றால் 'இந்தியா' தற்போது இருப்பதைபோல இருக்காது எனவும் அச்சம் தெரிவித்துள்ள அவர்,

நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரையில் மாநிலங்களில் பிராந்திய கட்சிகள் வலுவாக இருந்தாலும், தேசிய முகம் அவசியம் என கூறியுள்ளார்.

அந்த முகம் காங்கிரஸ் கட்சியே எனக் கூறியிருக்கும் முதல்வர், ஒற்றுமை யாத்திரை வெற்றி பெற்றுள்ளதாகவும், ராகுல் இந்தியாவின் நம்பிக்கையாக பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க சில பரிந்துரைகளை நிதிஷ் குமாருக்கு வழங்கியிருப்பதாக கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின்,

ஒரு மாநிலத்தில் வலுவாக உள்ள பிராந்திய கட்சியை கூட்டணிக்கு தலைமையேற்க வேண்டுமெனவும்,

கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்றாலும் தொகுதி பங்கீட்டை செய்ய வேண்டுமெனவும்,

இந்த இரண்டும் பயன் அளிக்கவில்லை என்றால், ஒரு பொதுவான வேட்பாளரை நிறுத்த வேண்டுமெனவும் பரிந்துரை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

இதுவுமே கட்சிகளுக்கு சரியானதாக தென்படவில்லை என்றால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைய வேண்டுமெனவும்,

எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒரு பொதுவான செயல்திட்டத்தை உருவாக்கி, கூட்டணி சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய பொதுவான கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க வேண்டுமென தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

மம்தா பானர்ஜி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு இடையே இருக்கும் வேறுபாடு குறித்து தனது கருத்தை பகிர்ந்த முதல்வர், எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றதை சுட்டிக் காட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்