"நான் கர்ப்பம் ஆகியிட்டேன்....குழந்தையும் பிறந்தது ஆனால்..." - கணவனுக்கு மனைவி கொடுத்த ஷாக்
பூந்தமல்லி அருகே கர்ப்பம் ஆகாமலேயே குழந்தை பிறந்ததாக கூறி, பெண் ஒருவர் கணவர் குடும்பத்தை ஏமாற்றி வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பூந்தமல்லி அடுத்த கண்ணப்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருப்பவர் மூர்த்தி. இந்தநிலையில் வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்த அவரது மனைவி உமா மகேஸ்வரி, அந்த மருத்துவமனையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும், இன்குபேட்டரில் வைக்க வேண்டும் என குழந்தையை எடுத்து சென்ற மருத்துவர்கள், தற்போது தனக்கு குழந்தை பிறக்கவில்லை என கூறுவதாகவும் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தார். இதனையடுத்து உமா மகேஸ்வரியின் கணவரும், அவரது குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் உமா மகேஸ்வரியிடம் விசாரணை நடத்தியபோபோது, கர்ப்பம் அடைந்ததாக உமா மகேஸ்வரி தனது கணவர் குடும்பத்தை ஏமாற்றி வந்ததும், தற்போது, குழந்தை பிறந்ததாக நாடகமாடியதும் தெரியவந்தது. இதனையடுத்து உமா மகேஸ்வரியை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.