உயிர்களை காவு வாங்கிய கிணறு- வண்டியுடன் விழுந்த சிறுவர்கள்-காப்பற்ற குதித்தவர்கள் பலியானது எப்படி.?
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, சாலையோர கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவர்களைக் காப்பாற்ற முயன்ற 3 பேர் மற்றும் கிணற்றில் விழுந்த ஒரு சிறுவன் என 4 பேர் உயிரிழந்ததன் சோக சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு...
உயிரைக் காப்பாற்ற முன்வந்து உயிரை பறிகொடுத்த துயர சம்பவம் இது...
ராசிபுரம் அருகே உள்ள கணவாய்பட்டியை சேர்ந்தவர்கள் சிறுவர்களான நிதிஷ்குமார், அபினேஷ், விக்னேஷ்... நண்பர்களான இவர்கள், கபடி விளையாடுவதற்காக, ஒரே இருசக்கர வாகனத்தில் ஏறி, மைதானத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். ஆனால் இருசக்கர வாகனம் சற்று நிலைதடுமாறவே, துரதிர்ஷ்டவசமாக சாலையின் ஓரத்தில் உள்ள 100 அடி ஆழ கிணற்றில் விழுந்துள்ளது.
சிறுவர்களின் சத்தம் கேட்டு, ஓடிவந்த அபினேஷின் தந்தை குப்புசாமி மற்றும் அவரது இரு நண்பர்களான அசோக்குமார், சரவணன் ஆகியோர், சிறுவர்களைக் காப்பாற்ற கிணற்றில் குதித்துள்ளனர்.
ஆழமான கிணறு என்பதால், சிறுவர்களை காப்பாற்ற 3 பேரும் தொடர்ந்து போராடினர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் நிதிஷ்குமார் மற்றும் அபினேஷ் காப்பாற்றப்பட்டபோது, அங்கு திரண்டிருந்தவர்களின் முகங்கள், கடவுளுக்கு நன்றி கூறியபடி புன்னகைத்தது. ஆனால், அந்த புன்னகை சில நொடிகளில் மாயமானது...
உயிர்களை காவு வாங்கிய கிணறு- வண்டியுடன் விழுந்த சிறுவர்கள்-காப்பற்ற குதித்தவர்கள் பலியானது எப்படி.?2 சிறுவர்களை காப்பாற்றிய 3 பேரும், மற்றொருவரை சிறுவனை மீட்பதற்குள், நீரில் மூழ்கி உயிரிழந்தது அதிர்ச்சியில் உறைய வைத்தது.
தகவலின் பேரில் வந்த தீயணைப்புத் துறையினர், உயிரிழந்த சிறுவன் விக்னேஷ், குப்புசாமி, அசோக்குமார், சரவணன் ஆகிய 4 பேரின் உடல்களை போராடி மீட்டனர் செந்தில்குமார், மாவட்ட அலுவலர் தீயணைப்புத்துறை
"100 அடி ஆழ கிணற்றில் 10 அடி மட்டுமே நீர் இருந்தது"
"மூச்சுத்திணறலால் மீட்புப் பணி கடினமாக இருந்தது"
"நீரை வடியவைத்து 4 பேரின் உடல்களை மீட்டோம்"
ஒரு சில நிமிடங்களில் எல்லாமே முடிந்துவிட்டதுபோல் நடந்தேறியது இந்த துயர சம்பவம்...
உயிருடன் மீட்கப்பட்ட இரு சிறுவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்த 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.