தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில், கடந்த ஒருவாரமாக பரவலாக மழை பெய்தது. கோட்டயம், திருச்சூர், வயநாடு, கோழிக்கோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ததால், தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளன. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதுவரை 19 போ் உயிரிழந்துள்ளனர். 227 நிவாரண முகாம்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்துள்ளனா். வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள், வீடுகளின் மேல்தளம் மற்றும் மேடான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காததால், கடும் அவதியடைந்துள்ளனர். அதே நேரத்தில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.