மாதம் 15ஆயிரம் வட்டி...360 கோடி அபேஸ் செய்த நிறுவனம் - அதிர்ச்சியியின் உச்சத்தில் முதலீட்டாளர்கள்

Update: 2022-11-17 06:43 GMT

முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என கூறி சுமார் 1500 முதலீட்டாளர்களிடம் இருந்து 360 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக ஹிஜாவு நிறுவனத்தின் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

துபாய் உள்ளிட்ட நாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை வட்டி கிடைக்கும் என கூறி விளம்பரம் வெளியிட்டிருக்கிறது ஹிஜாவு நிறுவனம். இதனை நம்பி ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்திருந்த நிலையில் திடீரென அந்த நிறுவனம் வட்டி தருவதை நிறுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. அடுத்தடுத்த புகார்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் ஹிஜாவு குழுமத்தின் தலைவர் சவுந்தரராஜன் மற்றும் நிர்வாக இயக்குநர் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 1500 முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 360 கோடி ரூபாய் வரை பணத்தை ஏமாற்றியதாகவும் தெரியவந்திருக்கும் நிலையில் 15 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நேரு என்பவரை போலீசார் கைது செய்திருக்கும் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்