சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும் வகையில் சைபர் அலெர்ட் செயலியை சென்னை காவல் துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த சைபர் அலெர்ட் செயலியை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவல் ஆணையர் அலுவலகத்தில் அறிமுகம் செய்து வைத்தார். இச்செயலியில் சைபர் குற்றவாளிகள் பயன்படுத்திய மொபைல் எண்கள், வங்கி கணக்குகள் சமூக வலைத்தள கணக்குகள், ஈமெயில் முகவரிகள், வெப்சைட்டுகள் போன்றவை சென்னை காவல்துறையின் 20 காவல் பிரிவுகளால் உள்ளீடு செய்யப்படுகிறது. இதன் வாயிலாக, சைபர் குற்ற தரவுகளை கண்காணித்து புலனாய்வு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை கைது செய்வதை மேம்படுத்த இயலும் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.