ஏடிஎம் மையத்தில் உதவி..! - வீட்டில் 271 ஏடிஎம் கார்டுகள்... - டிப் டாப் ஆசாமியின் பலே திட்டம்
சென்னையில், பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய பிரபல ஏ.டி.எம். கொள்ளையனை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 271 ஏ.டி.எம் கார்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
சென்னை எம்.கே.பி. நகரைச் சேர்ந்த ஜாக்லின் என்பவர், அம்பேத்கர் கல்லூரி சாலையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முயன்றபோது தடுமாறியுள்ளார்.
அப்போது பின்னால் நின்றிருந்த நபரிடம் ஜாக்குலின் கேட்கவே, அந்த நபர் உதவி செய்ததுபோல் நடித்து, அதே வங்கியை சேர்ந்த வேறொரு ஏடிஎம் கார்டை, ஜாக்குலினிடம் கொடுத்துள்ளார்.
பின்னர், ஜாக்குலின் செல்போன் எண்ணுக்கு அவரது வங்கிக் கணக்கில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக, குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், சம்பந்தப்பட்ட வங்கியை நாடியபோது, பணம் எடுக்கப்பட்ட தகவலை அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், பெரம்பூரைச் சேர்ந்த பிரபு என்பதை உறுதி செய்த போலீசார், வீட்டிற்கு சென்று அவரைக் கைது செய்தனர்.
மேலும், அந்த நபரின் வீட்டை சோதனை செய்தபோது, 271 ஏடிம் கார்டுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவற்றை பறிமுதல் செய்தனர்.