கோரத்தாண்டவம் ஆடும் வெள்ளம்... ஹிமாச்சலில் பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு..!
இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ள நிலையில், சாலைகள் மற்றும் பாலங்கள் சேதம் அடைந்துள்ளதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்லமுடியாமல் தவித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் 40 பாலங்கள் சேதமடைந்துள்ளதாகவும் ஜூலை 15 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஹிமாச்சல் மாநில அரசு தெரிவித்துள்ளது.