இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (05-04-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
பிரதமர் வருகையை முன்னிட்டு எட்டாம் தேதி காலை 6 மணியிலிருந்து இரவு பத்து மணி வரை டிரோன்கள் பறக்க தடை...
சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு...
--
பத்தாம் வகுப்பு படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு உயர்கல்வி படிக்க வழிவகை செய்யப்படும்...
முதல்வர் திறனறி தேர்வு திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...
---
தினமும் 11 ஆயிரம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்...
மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதார துறை இலக்கு நிர்ணயம்...
---
மே 7ஆம் தேதி நடைபெறுகிறது நீட் தேர்வு...
விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்... தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்...
--
நெய்வேலி அருகே நீட் பயிற்சி மேற்கொண்டிருந்த மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை...
மாதிரி தேர்வில் உரிய மதிப்பெண் எடுக்காததால் மன உளைச்சல் என தகவல்...
--
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள உதவி பேராசிரியர் ஹரி பத்மனின் மனைவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்...
2 பேராசிரியர்களின் தூண்டுதலின் பேரில், முன்னாள் மாணவி போலி புகார் எனக் குற்றச்சாட்டு...
---
மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்... 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்...
படுகாயமடைந்த மீனவர்களுக்கு முதலுதவி அளித்து மீட்டு வந்த இந்திய கடலோர காவல் படை...
--
நிலக்கரி சுரங்க திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது...
சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி...
--
நிலக்கரி சுரங்க விவகாரத்தில், முதலமைச்சர் கடிதம் எழுதினால் மட்டும் போதாது என, ஈ.பி.எஸ் விமர்சனம்...
நிலக்கரி சுரங்கத்துக்கு டெண்டர் கோரியதை எதிர்ப்பதாக, ஓபிஎஸ் கருத்து...
--
நிலக்கரி சுரங்க விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினால் மட்டும் போதாது என ஈபிஎஸ் விமர்சனம்...
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு யாருடைய ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டது என அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி....
---
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, என்றென்றும் துணை நிற்கும்...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு...
--