"நீதிபதிகள் குறித்து யூடியூப் சேனலில் இழிவான கருத்து" தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2022-10-20 02:48 GMT

நீதிபதிகள் மற்றும் அரசியல் சாசன பதவி வகிப்பவர்கள் குறித்து இழிவான கருத்துகளை வெளியிடும் யூடியூப் சேனல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் வழக்கறிஞர் மற்றும் நீதிபதிக்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டது தொடர்பான வழக்கில், கைதான நபர், ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் யூடியூப் சேனல்களில் நேர்காணல் நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், அவதூறு கருத்துகளை வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு பிரிவு அமைக்கவும் தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டது. மேலும், மலிவான விளம்பரத்துக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்றும், இல்லையென்றால் காளான் போல் பரவிவிடுவார்கள் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்