காவல் நிலையத்தில் உயிரிழந்தவரின் உடல்பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைப்பு
திருச்சி சமயபுரம் காவல் நிலையத்தில் உயிரிழந்த முருகானந்தம் என்பவரின் உடல், பிரேத பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களிடம் செல்போன் திருட முயன்ற வழக்கில் கைதான அரியலூரைச் சேர்ந்த முருகானந்தம், காவல் நிலையத்தில் உள்ள கழிவறையில் மர்மமான முறையில் இறந்தார். அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
திருச்சி அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், முருகானந்தத்தின் உடலை அவருடைய உறவினர்கள் வாங்க மறுத்தனர். அவர்களிடம் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து, அவரின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.