செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி... தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து அழைப்பு - அழைப்பிதழை வழங்கிய குஜராத் அமைச்சர்கள்
குஜராத்தில் நடைபெறவுள்ள செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, குஜராத் மாநில அமைச்சர்கள் அழைப்பு விடுத்தனர்.
மத்திய மற்றும் குஜராத் மாநில அரசு இணைந்து "சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்" என்ற நிகழ்ச்சியை அகமதாபாத்தில் ஏப்ரல் 17 முதல் 26-ம் தேதி வரை 10 நாட்கள் நடத்த முடிவு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் படி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து, குஜராத் மாநில அமைச்சர்கள் குன்வர்ஜிபாய் பவாலியா, ஜெகதீஸ் விஸ்வகர்மா உள்ளிட்ட 8 பேர் நேரில் அழைப்பு விடுத்தனர்.