பழங்குடியின கிராமத்தில் நடந்த பாலம் கட்டும் பணி - பாலம் யார் கட்டுவது என கவுன்சிலர்கள் மோதல்

Update: 2023-02-08 06:32 GMT

நீலகிரி மாவட்டம் சேப்பட்டி கிராமத்தில், புதிதாக தொடங்கப்பட்ட பாலத்தின் வேலை நிறுத்தப்பட்டுள்ளது.

கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூடலூர் நகராட்சி மற்றும் தேவர் சோலை பேரூராட்சி என இரு எல்லைகளில் உள்ளது சேப்பட்டி பழங்குடியின கிராமம்.

இங்கு, நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைப் பகுதியில் பழங்குடியின கிராமத்திற்கு பாலம் கட்டுவதற்காக போட்டி போட்டு நிதி இரண்டு நிர்வாகமும் நிதி ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில், தேவர் சோலை பேரூராட்சி 18 ஆவது கவுன்சிலர் சாய் ப்ரியா, கூடலூர் நகராட்சி 13ஆம் வார்டு கவுன்சிலர் மல்லிகா இருவரும், பாலம் யார் கட்டுவது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்