“குறைஞ்சது ரூ. 10,000 வரும்...“ கூச்சமே இல்லாமல் கேட்ட அரசு ஊழியர்வைரலாக பரவிய வீடியோ
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில், பதிவுத்துறை தலைமை எழுத்தர் ஒருவர் லஞ்சம் கேட்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு, கருவேலுரை சேர்ந்த நபர் ஒருவர், வில்லங்க சான்று பெற வந்துள்ளார். அவரிடம் அங்கு பதிவுத்துறை தலைமை எழுத்தராக பணிபுரியும் தனபால் என்பவர், வில்லங்க சான்றிதழுக்காக பத்தாயிரம் ரூபாய் பணம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், வில்லங்க சான்று பெற 121 ரூபாய் மட்டுமே அரசு விலை நிர்ணயம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.