அரசு மருத்துவமனை அவலம்.. பிரசவத்தின் போது மின்தடை.. குழந்தை பிறந்த நிலையில் பெண் உயிரிழப்பு

Update: 2022-09-25 15:07 GMT

அரசு மருத்துவமனை அவலம்.. பிரசவத்தின் போது மின்தடை.. குழந்தை பிறந்த நிலையில் பெண் உயிரிழப்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே, உரிய நேரத்தில் பிரசவம் பார்க்கத் தவறியதால், பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தில், அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அன்னூர் அருகே உள்ள ஊத்துப்பாளையம் கிராம பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரது மனைவி வான்மதி, பிரசவத்திற்காக, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க திட்டமிட்டிருந்தபோது, திடீரென மின் தடை ஏற்பட்டதாலும், ஜெனரேட்டர் பழுதானதாலும் பிரசவம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த விக்னேஸ்வரன், தனது மனைவியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.

அங்கு வான்மதிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், திடீரென வான்மதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர், உரிய நேரத்தில் பிரசவம் பார்க்காததே உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி, அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலின் பேரில் வந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்