ஆளுநரின் விமான பயணச் செலவுக்காக, கூடுதலாக 30 லட்சம் ரூபாய் ஒதுக்க, கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. முதல்வர் பினராயி விஜயனுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகின்றது. இந்நிலையில், ஆளுநரின் விமான செலவுக்கு கூடுதல் நிதி கோரி, ராஜ்பவன் செயலர் கடந்த டிசம்பர் மாதம், அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இதனிடையே, முடிவெடுக்கப்படாமல் இருந்த இந்த கோப்பில், நிதியமைச்சர் பாலகோபால் தற்போது கையெழுத்திட்டார்.