"திருநங்கைகளுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்" - திருநங்கை பேட்டி

Update: 2023-05-01 03:11 GMT

கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவை ஒட்டி, "மிஸ் திருநங்கை 2023" அழகி போட்டி, விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, பழனி எம்எல்ஏ புகழேந்தி, நடிகை வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் போட்டியை தொடங்கி வைத்தனர். நடனப் போட்டி, பாட்டு போட்டிகளில் திருநங்கைகள் ஏராளமானோர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, மிஸ் திருநங்கை அழகி போட்டியில் 21 திருநங்கைகள் பங்கேற்றனர். இதில், "மிஸ் திருநங்கை 2023" பட்டத்தை சேலத்தை சேர்ந்த திருநங்கை பிரகதீஷ் சிவம் தட்டிச் சென்றார். அவருக்கு கிரீடம் சூட்டப்பட்டு, 15 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த வைசு இரண்டாம் இடமும், தூத்துக்குடியை சேர்ந்த பியுலா மூன்றாவது இடமும் பிடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்