ஆபத்தான நிலையில் அரசு பேருந்து ..பேருந்துடன் கலெக்டர் அலுவலகம் வந்த ஓட்டுநர் - பரபரப்பான அதிகாரிகள்

Update: 2022-12-15 02:37 GMT

அழகன்நாயக்கன்பட்டியை சேர்ந்த முருகேசன், குமுளியில் இருந்து திண்டுக்கல்லுக்கு அரசு பேருந்தை ஓட்டி வந்தார்.

பேருந்தின் இருக்கைகள், ஜன்னல் கண்ணாடி, கதவுகள், மேற்கூரை, ஸ்டேரிங் உள்ளிட்டவை பழுதடைந்துள்ளதால் பயணிகள் திட்டுவதாக ஓட்டுநர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

பேருந்தின் நிலை குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என வருத்தத்துடன் கூறிய முருகேசன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு பேருந்தை நிறுத்தினார்.

மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளரிடம் பேருந்தின் நிலைமை குறித்தும் புகார் மனுவையும் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்