விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி - பச்சை கொடி காட்டிய மத்திய அரசு!

Update: 2023-06-29 02:06 GMT

விவசாயிகளுக்கான யூரியா உர மானியம், நேனோ யூரியா உற்பத்தி ஆலைகள் உள்பட 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான விவசாயிகள் நல தொகுப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், விவசாயிகளுக்கு தொடர்ந்து குறைந்த விலையில் யூரியா கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் 45 கிலோ யூரியா மூட்டை 242 ரூபாய்க்கு கிடைக்கும் வகையில் யூரியாவுக்கான உர மானியத்தை தொடர்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

இந்த திட்டத்துக்காக, 3 லட்சத்து 68 ஆயிரத்து 676 கோடி ரூபாயை செலவு செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன் மூலம் யூரியா உரத்தை வாங்குவதற்கு விவசாயிகள் கூடுதலாக செலவு செய்வது தவிர்க்கப்படுவதுடன் அவர்கள் தங்களின் இடுபொருள் செலவை குறைக்கவும் வழிவகுக்கிறது. மேலும், நேனோ யூரியா உற்பத்தி ஆலைகளை ஏற்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்