உள்ளாடையில் கடத்தி வந்த தங்கம் - சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Update: 2022-12-14 02:35 GMT

சவுதி அரேபியாவில் இருந்து, சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதில் சென்னையை சேர்ந்த இரண்டு பயணிகள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த‌தால், அவர்களின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, அவர்கள் கொண்டு வந்த சிகரெட் பெட்டிகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோல், துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணித்த 2 பேர், உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தியது தெரியவந்த‌து.

4 பேரிடம் இருந்து ஒரு கோடியே 32 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 767 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் 4 பேரையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், கடத்தலின் பின்னணி குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்