காதலனுடன் சென்ற சிறுமி - மீட்டு கொண்டு வந்த குடும்பம் - வீட்டில் சிறுமி மர்ம மரணம்

Update: 2022-09-28 11:25 GMT

வாழப்பாடி அருகே பெரியகவுண்டாபுரம் பகுதியை சேர்ந்த அறிவழகன் - சியாமளா தம்பதியின் மூத்த மகளை, அதே பகுதியை சேர்ந்த சம்பத் என்பவர் திருமணம் செய்வதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சிறுமியை மீட்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சம்பத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமிக்கு, வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க, அவரது பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆனால், தற்போது திருமணம் வேண்டாம் என ஸ்ரீதேவி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த ஸ்ரீதேவியின் தாயார் சியாமளா, விஷம் குடித்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், வீட்டில் சிறுமி இறந்து கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சிறுமியின் உடலை மீட்ட போலீசார், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயன்றபோது, பொதுமக்கள் வழிமறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிறுமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்ததை அடுத்து, கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்