பால் விலையை திரும்ப பெறுக! - பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல் | aavin milk | thanthi tv
ஆவின் ஆரஞ்சு பால் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என, பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்னுசாமி, சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆவின் நிறுவனம் உற்பத்தி செய்யும் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தியதால், வாங்குவோர் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு மண்டலத்திலும் ஐந்தாயிரம் போலி மாதாந்திர அட்டை மூலம் அதிகாரிகள் பால் வாங்குவதால், ஆவினுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக, பொன்னுசாமி குறிப்பிட்டார். எனவே, 12 ரூபாய் விலை உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும், இல்லையென்றால் ஆரஞ்சு பாலை புறக்கணிப்போம் என தெரிவித்தார்.