இந்தோனேசியாவின் பாலியில் நடைபெறும் வருடாந்திர ஜி 20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்.கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போர் குறித்து இந்த மாநாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு விவாதிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க பாலிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை, இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ வரவேற்றார். இதையடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த பிரதமர், கை குலுக்கிக்கொண்டனர். மேலும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனையும் சந்தித்த பிரதமர் மோடி, சிறிது நேரம் கலந்துரையாடினார். இந்நிலையில், உக்ரைனில் போரை நிறுத்துவதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டும் என இந்த மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.