ஜி 20 மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு

Update: 2022-12-06 08:24 GMT

இயற்கை பாதுகாப்பு காலநிலை மாற்றத்தை கையாள தமிழ்நாடு 'பசுமை காலநிலை நிறுவனத்தை உருவாக்கியுள்ளதாக ஜி 20 ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

ஜி20 ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், 2023-ஆம் ஆண்டுக்கான ஜி-20 தலைமையை இந்தியா ஏற்றிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுக்கள் என கூறியுள்ளார்.

இது நம் நாட்டுக்கு மிகவும் பெருமை தரக்கூடிய ஒன்று எனறும், அனைத்து உலக நாடுகளாலும் இந்தியா கூர்ந்து கவனிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

அமைதி, அகிம்சை, நல்லிணக்கம், சமத்துவம், சமநீதி' ஆகிய உயர் விழுமியங்களை உலக அளவில் கொண்டு செல்ல பிரதமர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார் என்றும் தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்தைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

இயற்கைப் பாதுகாப்பு இயக்கங்களை நிர்வகிக்கவும், காலநிலை மாற்றத்தைக் கையாளவும் 'தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்' என்ற பெயரில் சிறப்பு நோக்க நிறுவனத்தை உருவாக்கி உள்ளதாக கூறினார்.

உலக அளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களைக் காப்பாற்றுவதற்கு அனைத்து வகையிலும் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது உரையில் குறிப்பிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்